2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப்போட்டியில் மண்முனை வடக்கு சம்பியன்

A.P.Mathan   / 2011 ஜூன் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாபெரும் விளையாட்டுப்போட்டி நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் திருமதி பவளகாந்தன், உள்ளூராட்சி ஆணையாளர் சிவநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இந்த விளையாட்டுப்போட்டியில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 46 புள்ளிகளைப் பெற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும், 23 புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், 22 புள்ளிகளைப் பெற்று ஆரையம்பதி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
 
இதனைப்போன்று மெய்வல்லுனர் போட்டியில் பெண்கள் பிரிவில் 46 புள்ளிகளைப் பெற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகமும் 45 புள்ளிகளைப் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், 28 புள்ளிகளைப்பெற்று கிராண் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
 
அத்துடன் மாவட்ட விளையாட்டுப்போட்டியின் இறுதி முடிவுகளின் படி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 97 புள்ளிகளைப்பெற்று இந்த வருடத்துக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
 
48 புள்ளிகளைப் பெற்று கிராண் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும் 41 புள்ளிகளைப் பெற்று செங்கலடி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் 24 புள்ளிகளைப் பெற்று ஏறாவூர் பிரதேச செயலகம் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X