Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 27 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கே.சி.சி.சி. வெற்றி கிண்ணத்தை இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் ஜொலிஸ்ரார் விளையாட்டு கழகம் கைப்பற்றியது.
கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம் 19ஆவது ஆண்டாக நடத்திய யாழ். மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியும் யாழ். ஜொலிஸ்ரார் அணியும் மோதிக்கொண்டன.
பூவா தலையா போட்டதில் வெற்றிபெற்ற பல்கலைக்கழக அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட ஜொலிஸ்ரார் அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.
ஜொலிஸ்ரார் விளையாட்டு கழகம் 40 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது.
225 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பல்கலைக்கழக அணி மிகவும் விரைவாக ஓட்டங்களை பெற முயன்று 32.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.
ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கே.மதுசன் போட்டியின் நாயகனாகவும் பி.சஞ்சிவன் சிறந்த பந்து வீச்சாளராகவும் எஸ்.லட்சுமிகாந் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எ.ஜெனார்த்தனா சிறந்த களத்தடுப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
18 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
50 minute ago
2 hours ago