2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமராட்சி கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் சிவநாதன் கழகம் சம்பியன்

Kogilavani   / 2011 ஜூன் 27 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பருத்தித்துறை 521 ஆவது படைப்பிரிவினால் ஏற்பாட்டில் வடமராட்சி பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்டப்போட்டியில் சிவநாதன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. 

கடந்த ஒரு மாதகாலம் இடம்பெற்று இச்சுற்றுப்போட்டியில் 32 உள்ளூர் விளையாட்டு கழகங்கள் பங்குப்பற்றின. இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நவசக்தி விளையாட்டுக் கழகமும், சிவானந்தா விளையாட்டுக் கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன.  இப்போட்டியில் சிவானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றிக்கொண்டு வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இந்நிகழ்வில், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பிரதம விருந்தினராகக் கலந்துக்கொண்டு வீரர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

இச்சுற்றுப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசை நவசக்தி விளையாட்டுக் கழகத்தின் வீரரான ஏ.இ.அமல்ராஜ் பெற்றார். இறுதிப்போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசை சிவானந்தன் அணியைச் சேர்ந்த சந்ருவும் சிறந்த கோல் கீப்பருக்கான பரிசினை சிவானந்தன் அணியைச் சேர்ந்த எம்.பிரசாந்தனும் பெற்றுக்கொண்டனர்.

சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த சிவானந்தன் அணிக்கு 10000 ரூபாய் காசோலையும், இரண்டமிடம் பெற்ற நவசக்தி அணிக்கு 5000 ரூபா காசோலையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், பிரிகேடியர் ஜெனரல் பி.சி.ஜே.ஏ.எப் ரொட்ரிகோ, 52 ஆவது படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் அனுர சுதசிங்க, 521 ஆவது படையணியின் தளபதி லெப். கேணல், டிக்கிரி திஸநாயக்க, கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசீலன், பருத்தித்துறை  பிரதேச செயலாளர் வாகீஸ்வரன், மருதங்கேணி பிரதேச செயலாளர் கிரிலிங்கநாதன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X