2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேசிய மட்டத்திலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் வட மாகாண அணி மூன்றாம் இடம்

Super User   / 2011 ஜூன் 27 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

 

இலங்கை விளையாட்டு அமைச்சினால் தேசிய மட்டத்தில் மாகாண அணிகளுக்கு இடையே நடத்திய பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் வட மாகாண அணி முதல் தடவையாக மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கூடைப்பந்தாட்ட பெண்கள் அணியினருக்கான இறுதி போட்டி கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மூன்றாம் இடத்திற்;ககான போட்டியில் கடந்தாண்டு மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட தென் மாகாண அணியுடன் வட மாகாண அணி மோதிக்கொண்டார்கள்.

ஆட்ட நிறைவில் வட மாகாண அணி 38 க்கு 37 புள்ளிகள் என்ற அடிப்படையில் தென் மாகாண அணியை வெற்றி கொண்டதுடன் வட மாகாணத்திற்கு முதல் தடவையாக மூன்றாம் இடத்தை கூடைப்பந்தாட்ட போட்டியில் பெற்றுக்கொடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X