2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரதேச விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2011 ஜூன் 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரனையுடன் கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலக பிரிவில் பிரதேச விளையாட்டு  போட்டி நேற்று மாலை கறுவாக்கேனி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 14 விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொண்டன.

இதன்போது 61 புள்ளிகளைப் பெற்று வாழைச்சேனை இளைஞர் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தினையும், 41 புள்ளிகளைப் பெற்று பேத்தாளை இளந்தளிர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினையும், 37 புள்ளிகளைப் பெற்று மீராவோடை சக்தி விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.  

பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு போட்டியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டுக்கழக வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X