2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ் மாவட்டத்தில் கூடைப்பந்தாட்ட ஊர்தி ஊர்வலம்

Super User   / 2011 ஜூன் 30 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்கும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 4 ம் திகதி வரை கூடைப்பந்தாட்டப் பந்தை தாங்கிய ஊர்தி ஊர்வலம் ஒன்று யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளது.

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெறும் இந் நிகழ்வில் கூடைப்பந்தாட்டம் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் யாழ் மாவட்டத்தில் தேசிய மட்டத்திற்கான விளையாட்டு வீர வீராங்கனைகள் இருப்பதை உணர்த்துவதுடன் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக இந்த ஊர்தி ஊர்வலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0

  • hamshika selvakumar Thursday, 28 February 2013 12:55 PM

    நான் கூடைப்பந்தாட்டத்தை மிகவும் நேசிக்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X