2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி வட மாகாண சம்பியன்

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாண கல்வி அமைச்சினால் வட மாகாண மாவட்ட பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா முஸ்ஸிம் மகாவித்தியலய மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற இறுதிப் போட்டியில் வவுனியா கிடாய்சூரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் மோதின.

மூன்று சுற்றுக்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இரண்டு நேர் சுற்றுக்களை முறையே 25-11,  25-16 புள்ளிகள் என்ற அடிப்படையில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வவுனியா கிடாய்சூரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை வெற்றி கொண்டு, வட மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X