2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுக் கழகங்களை வலுவுட்டும் நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஜூலை 08 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களையும் விளையாட்டு வீரர்களையும் வலுவுட்டும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைகளில் விளையாட்டுத் திறனை வளர்க்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி நாளை காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக விளையாடடுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கலந்து கொள்ளவுள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்டத்தின் ஏனைய விளையாட்டுக் கழகங்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்குமான வலுவுட்டலுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X