2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பிரேவ் லீடர்ஸ் கழகம் வெற்றி

Kogilavani   / 2011 ஜூலை 09 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 31 வருட நிறைவினை முன்னிட்டு  வொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாயந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் 5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 30 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 227 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தினர் 27 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது, வெற்றிப்பெற்ற அணிக்கான கிண்ணத்தை அகில இலங்கை இஸ்லாமிய இளைஞர்  முன்னணியின் தலைவர் எம்.எஸ்.ஹக்கீம் வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X