2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அகில இலங்கை ரீதியான உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்

Kogilavani   / 2011 ஜூலை 09 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்துள்ள 23 வது விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் அகில இலங்கை ரீதியான உதைப்பந்தாட்ட போட்டி இன்று சனிக்கிழமை காலை பதுளை வின்சன்ட டயஸ் விளையாட்டு அரங்கில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாடு முழுவதுமிருந்து 25 அணிகள் பங்கு கொள்கின்றன. யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு. கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, உள்ளிட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதைப்பந்தாட்ட அணிகளில் போட்டிகளில் பங்கு கொண்டுள்ளன.

இன்றைய போட்டிகளை பதுளை மாநகர முதல்வர் உபாலி நிஸ்ஸங்க குணசேகர உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X