2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'சமபோச' கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 12 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை கால்பந்தாட்ட சங்கமும்  இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கமும் இணைந்து  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்திய 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 'சமபோச'  கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை சம்பியனக்க  தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில்  ஏறாவூர்  அலிகார் தேசிய பாடசாலை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தை     
5- 1 என்ற கோல் அடிப்படையிலும்  மற்றுமொரு அரையிறுதிப்போட்டியில்  சாய்ந்தமருது அல் - ஜலால் வித்தியாலயம்  கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தை  2 - 0 என்ற கோல் அடிப்படையிலும் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது அல் - ஜலால் வித்தியாலயத்துடன் போட்டியில் ஈடுபட்ட ஏறாவூர்  அலிகார்  தேசியக்கல்லூரி  2 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று   'சமபோ ' கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்போட்டி நிகழ்வுகளில்  கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில்  பிரதம அதிதியாகவும் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் லங்கா ரஜீவ் கௌரவ அதிதியாகவும்  ஓய்வுபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கல்முனை அல் பஹ்ரியா, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை, மருதமுனை அல் ஹம்றா, மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி, சாய்ந்தமருது அல் ஜலால்,  அம்பாறை சத்தாதிஸ்ஸ வித்தியாலயம், கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, மருதமுனை அல் மனார்,  கல்முனை அல் அஸ்ஹர், நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஆகிய அணிகள் பங்குகொண்டன.

இச்சுற்றுப்போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும்  அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட இணைப்பாளர் அலியார் ஏ.பைஸர்  மேற்கொண்டிருந்தார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X