2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் சிறப்பாக ஆரம்பமாகியது கிரிடா சக்திய விளையாட்டு பயிற்சி முகாம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 15 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

திறன்மிகு வீரர்களை தெரிவுசெய்து அவர்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போட்டிகளில் பங்குபற்றச்செய்யும் வகையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் கிரிடா சக்தி விளையாட்டு பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி பொது மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமாகியது.

இந்நிகழ்வை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு  சந்திரகுமார், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றொஹான் ரத்வத்த ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

பயிற்சினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார், 'கிளிநொச்சி மாவட்ட வீரர்களுக்கு இது ஒர் அரிய சந்தர்ப்பம். எனவே கிடைத்த இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சிறந்த வீரர்களாக தேசிய சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் எனவும் மாவட்ட விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான ஏனைய வசதிவாய்ப்புக்களை தாம் ஏற்படுத்தித்தர தயாராக உள்ளதாகவும்' தெரிவித்தார்.

15, 16 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இப்பயிற்சியானது ஒவ்வொரு விளையாட்டுகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.

திறன் மிகு வீரர்கள் தேசிய ரீதியிலான பயிற்சிக்கு அழைத்துச்செல்லப்படுவதோடு அவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக மாதாந்தம் ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X