Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூலை 14 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சித்தாண்டிப் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
21 வயதிற்குட்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இ.பிரியா என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
19 வயதிற்;குட்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் கூடைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும்
வலைப்பந்தாட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தையும்
பெற்று வெற்றிக்கேடயத்தை தனதாக்கிக்கொண்டனர் சித்தாண்டிப் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள்.
இந்த கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் வ.பஞ்சலிங்கம் தலைமையில் பாடசாலை நிர்வாகம், ஆலய நிர்வாகம் மற்றும் அப்பகுதி சமூகத்தவரினால் ஒழுங்குபடுத்தப்பட்டது.
ஆலயமுன்றலில் வைத்து வெற்றியாளர்களுக்கு மலர்மாலை அணிவித்து வெற்றிப்பரிசில்கள் வழங்கி பான்ட்வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலை வளகாம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
18 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
50 minute ago
2 hours ago