2025 ஜூலை 17, வியாழக்கிழமை

றகர் போட்டித்தொடரில் கண்டி திருத்துவக் கல்லூரிக்கு வெற்றி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 19 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பாடசாலைகளுக்கிடையே சிங்கர் கேடயத்திற்காக இடம்பெற்று வரும் றகர் போட்டித்தொடரில் கண்டி திருத்துவக்  கல்லூரி, கண்டி தர்மராஜக் கல்லூரியை 20க்கு  10 என்ற புள்ளி வித்தியாசத்தில்  வெற்றியீட்டியது.

நேற்று திங்கட்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றது.  இப்போட்டியின் இடைவேளையின்போது 10க்கு 0 என்ற நிலையில் திருத்துவக் கல்லூரி முன்னிலை வகித்தது. போட்டி ஆரம்பித்து முதல் பத்து நிமிடத்தில் ஒரு பெனல்டி, ஒரு கோல் மூலம் இப்புள்ளி பெறப்பட்டது.

இரண்டாம் சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடிய இரு அணியினரும் தலா 10 புள்ளிகள் வீதம் பெற்றனர்.
இப்போட்டியில் 2 கோல் 2 பெனல் மூலம் திருத்துவக் கல்லூரி 20 புள்ளிகளைப் பெற்றதுடன், 1 கோல் 1 பெனல்டி மூலம் தர்மராஜக் கல்லூரி 10 புள்ளிகளைப் பெற்றது.

இதேவேளை, போட்டிக்கு உத்தியோகபூர்வ அறிவிக்கப்பட்டிருந்த மத்தியஸ்தர் போட்டியை பகிஷ்கரித்ததன் காரணமாக தற்காலிக மத்தியஸ்தராக நிமல் பெரேரா கடமை புரிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X