2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 22 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பக் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீட  பதில்  பீடாதிபதியும் விளையாட்டு ஆலோசனை பேரவையின் பணிப்பாளருமான  கலாநிதி ஏ.ஜௌபரின் தலைமையில்  இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மற்றும் உடற்கல்வித்துறை பொறுப்பாளர் எம்.எல்.ஏ.தாஹிரின் ஏற்பாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பயிற்றுவிப்பாளர்கள்,  பொறுப்பாளர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ, வயம்ப,  பேராதனை, கொழும்பு, களணி, சப்ரகமுவ, யாழ்ப்பாணம், ரஜரட்ட, மொரட்டுவ, ஸ்ரீஜயவர்த்தனபுர மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீர, வீராங்கனைகள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X