Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 29 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம். தாஹிர்)
ஊவா மாகாண பாடசாலை விளையாட்டு போட்டிகள் இன்று பதுளை வின்சன்ட டயஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியில், பண்டாரவளை வலைய கல்வி காரியாலயம் 281 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை 265 புள்ளிகளை பெற்று வெளிமடை வலையமும் பெற்று கொண்டது.
போட்டிகளில் 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளவாய தெடகமுவ வித்தியாலய மாணவன் டி.எம். திலூஷ பிரபாத் கௌசல்ய 1.28 மீட்டர் உயரம் பாய்ந்து புதிய சாதனை படைத்தார். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக 13 வயதின் கீழ் போட்டியிட்ட பதுளை மாளியந்த மகா வித்தியாலய டீ.எம். அபேக்ஷh தில்ருக்ஷp தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த விளையாட்டு வீரராக வெளிமடை மத்திய மகா வித்தியாலய கே.டி. ருக்மால் சிரோன் தெரிவானார்.
100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.4 புதிய சாதனை ஒன்றை பதுளை விஷhகா பாலிகா வித்தியாலத்தை சேரந்த எஸ்.எல். விதான குருகே நிலைநாட்டினார்.
இந்நிகழ்வில், ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
7 hours ago
16 Jul 2025