2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மர்ஹும் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த கிண்ண சம்பியனாக வளத்தாப்பிட்டி வீனஸ் தெரிவு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நொக் அவுட்' முறையிலான மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த 15 கழகங்கள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில்  வளத்தாப்பிட்டி வீனஸ் அணி   மருதமுனை சமர் அணியினை எதிர்த்து   வளத்தாப்பிட்டி வீனஸ் அணியினர் 02 : 01 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சம்பியனானது.

மருதமுனை ஆசனல் அணியினரை எதிர்த்து அக்கறைப்பற்று எம்.சீ.யூத்ஸ் அணியினர் மோதி 05 : 01 என்ற ரீதியில் அக்கறைப்பற்று எம்.சீ.யூத்ஸ் அணியினர் மூன்றாம் தரத்திற்கு தெரிவாகினர்.

கல்முனை கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கொழும்பு தலைமைக் காரியாலய சட்டப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் எம்.ஏ.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் கௌரவ அதிதிகளாக  கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.ஏ.பஸீர், ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி உடற்கல்வித்துறை  விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி நாடாளுமன்ற அலுவல்கள் பிரிவின் மொழிபெயர்ப்பாளர் இரண்டாம் லெப்டினன் கே.எம்.தமீம் மற்றும் மர்ஹும் பழீல் பிரதேச செயளாலரின் புதல்வர் பழீல் நிகாப் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X