2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கிடையில் பெரு விளையாட்டுக்கள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை கல்வி அமைச்சினால் அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கிடையேயான முதலாம் கட்ட பெரு விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 08ஆம்  09ஆம் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் முதல் கட்டமாக  ஆண்கள், பெண்களுக்கான 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகளின் விபரம் வருமாறு:-

08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளில்  வலைப்பந்தாட்டம் 15, 17, 19 வயதுப் பிரிவினர்களுக்கு பண்டாரவளை நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளில் 17, 19 வயதுப் பிரிவினர்களுக்கான ஆண்களுக்கும்  19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டம்  பதுளை வின்சன்டயஸ் விளையாட்டரங்கு பதுளை கால்பந்தாட்ட மைதானம் பதுளை துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெறவுள்ளன.

08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ஆண்கள், பெண்களுக்கான சதுரங்கம் 15, 19 வயதுப் பிரிவினர்களுக்கானது. பதுளை மத்திய மகாவித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ஆண்கள், பெண்களுக்கான உடற்பயிற்சிப் போட்டிகள் ஹாலியல மத்திய மகாவித்தியாலய மைதானம் ஹாலியல பிரதேச சபை விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

10ஆம் திகதி ஆண்கள், பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டி பதுளை நகர மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ஆண்கள், பெண்களுக்கான கரம் 15, 19 வயதுப் பிரிவினர்களுக்கானது. பதுளை விசாகா பாலிகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

09ஆம் 10ஆம் திகதிகளில் ஆண்கள், பெண்களுக்கான நீச்சல் போட்டி கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ஆண்கள், பெண்களுக்கான ஜூடோ கொழும்பு ஜூடோ சங்க மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ஆண்கள், பெண்களுக்கான குத்துச்சண்டை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

08ஆம் 09ஆம் 10ஆம்  திகதிகளில் ஆண்கள், பெண்களுக்கான எல்லே. சீதுவ நகரசபை மைதானம், சீதுவ உடம்பிட்டிய குலசிங்க மகாவித்தியாலயம், ஏக்கல ஜீ.வி.சேனநாயக்கா வித்தியாலயம், சீதுவ ரந்தொழவ பஞ்ஞாரத்த பாலிக வித்தியாலயம், ஜாலய நகரசபை விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

09ஆம் 10ஆம் திகதிகளில் the school boy contest  பாணந்துறை  வாதுவ மத்திய மகாவித்தியாலத்தில் நடைபெறவுள்ளது.   

09ஆம் 10ஆம் திகதிகளில் பாரம் தூக்கும் போட்டி கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கபடி கொரனை தக்சிலா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X