Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மத்திய கல்லூரியின் 195 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்துக்கல்லூரி அணி சம்பியனாகியுள்ளது. இத் தொடரின்இறுதிப் போட்டி நிகழ்வு யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
5 ஓ வர்கள் மட்டுப்படுத்தப்பட்ட, அணிக்கு 6 பேர் கொண்ட இப்போட்டியில் யாழ். இந்து கல்லூரி பழைய மாணவர்கள் அணியும் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் அணியும் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லாரி பழைய மாணவர்கள் அணி 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றது.
இவ்வணியின் வீரர்களான மணிவண்ணன், ஜனார்த்தனா ஆகியோர் முறையே 41,15 ஓட்டங்பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 66ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணியில், அகிலன், காண்டிபன் லவேந்திரா ஆகியோர் முறையே 35, 14 ஓட்டங்களையும் பெற்றார்கள்.
இப்போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரணியைச் சேர்ந்த மணிவண்ணன், சிறந்த ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவரணியைச் சேர்ந்த காண்டிபன் சிறந்த பந்துவீச்சாளராகவும் மயூரன் சிறந்த களத்தடுப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 hours ago
16 Jul 2025