2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். மாவட்ட மாணவர்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சி

Super User   / 2011 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

ஜேர்மன் நாட்டின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களான பிறாம்ஸ் பெக்கன் வபர் மற்றும் கொல்கர் அபெர்மான் ஆகியோரினால்  வட மாகாணத்திற்க்கென வருடாந்தம் வழங்கப்படும் உதைபந்தாட்ட உபகரணகள் வழங்கழும் பயிற்சி முகாமும் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

யாழ். உதைபந்தாட்ட லீக் தலைவர் கிளிபேட் அன்ரனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கல்வி வலய உடற்கல்வி உதவி கல்வி  பணிப்பாளர் சண்.தயாளன் கலந்துகொண்டார்.

இப்பயிற்சி முகாமில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை வீரர்கள் ஆறு பேர் உட்பட யாழ் மாவட்ட பாடசாலைகளின் வீராகளுமாக மொத்தம் 30 பேர் கலந்து கொண்டார்கள். பயிற்சி நிறைவில் வீரர்களுக்கு காலணிகள் மற்றும் பந்துகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X