2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். நியூஸ்ரார் கழகத்தை தெல்லிப்பளை யூனியன் கழகம் வென்றது

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்  பி.எஸ்.குமாரசாமியின் ஞாபகார்த்த நினைவுக் கிண்ணத்திற்காக யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்தும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் முதல்சுற்றுப் போட்டியொன்றில்  யாழ்ப்பாணம் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகத்தை தெல்லிப்பளை யூனியன்ஸ் விளையாட்டுக்கழகம் 5 விக்கெட்டுக்களினால் வென்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 15 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

தயாளன் ஆட்டமிழக்காது 36  ஓட்டங்களையும் சதீஸ்கண்ணா 35  ஓட்டங்களையும் வைகுந்தன் 23 ஓட்டங்களையும் ஜோன்சன் 17 நிரோஐன் 13 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 15 ஓட்டங்களும் பெறப்பட்டன.

நியூஸ்ரார் விளையாட்டக் கழகத்தைச் சேர்ந்த விதுரன், பகீரதன் தலா 03 ஓவர்கள் பந்து வீசி முறையே 21, 30 ஓட்டங்களைக் கொடுத்து தலா 02 விக்கெட்டுக்களையும் ரமணன் 22 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் யூனியன்ஸ் விளையாட்டுக் கழக வீரர் அருணனின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது முதல் ஒவரிலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மூவரின்  விக்கெட்டுக்களை இழந்தது.

15 ஓவர்கள் நிறைவில் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றது.

களம் புகுந்த விதுரன் 57 இளங்கோ 19 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 37 ஓட்டங்கள் பெறப்பட்டன. யூனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அருணன் 2 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் ஜோன்சன் 3 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வைகுந்தன் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.       


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X