2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
கல்வி அமைச்சு நடத்தும் 2011 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் 8,9,10 ஆம் திகதிகளில் பதுளை வின்சன் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
 
இந்தச் சுற்றுப் போட்டியில் 17 வயதுப் பிரிவுக்காக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கிழக்கு மாகாணச் சம்பியனான கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி அணியும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி அணியும்  பங்கு பற்றுகின்றன.
இதேவேளை 19 வயதுப் பிரிவுக்காக இம்மாவட்டத்தில் இருந்து கிண்ணியா மத்திய கல்லூரி அணியே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X