Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பி.எஸ்.குமாரசுவாமியின் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கிடையேயான இருபதுக்கு இருபது இறுதி கிரிக்கெட் போட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சன் தயாளன் தலைமையில் நடைபெறும் இப்போட்டியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் மூத்த ஊடகவியலளாருமான என்.வித்தியாதரன் கலந்துகொள்ளவுள்ளார்.
இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் பற்றிசியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன. கடந்தாண்டு முதல் தடவையாக நடைபெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பி.எஸ்.குமாரசுவாமியின் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கிடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியை யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நேற்று சனிக்கிழமை நடத்தியது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் பற்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் பற்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
7 hours ago
16 Jul 2025