Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கோப்பாய் ஜக்கிய விளையாட்டுக் கழகத்தின் ஜயாத்துரை ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட முதல் தர அணிகளான ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகத்திற்கு எதிராக விளையாடிய ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி வாகை சூடியது.
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபர் அமரர் நா.சிவகடாட்சம் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கோப்பாய் ஐ.டி.எம் எதிர்த்து கோப்பாய் சென்மேரிஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. இதில் தனது அபாராதத் திறமையால் சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
யாழ். கோப்பாய் ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் மாவட்ட ரீதியாக நடத்திய கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் யாழ். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் கரப்பந்தாட்டத் திடலில் நடைபெற்றது.
கோப்பாய் ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எவ்.றஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜேஃ261 கிராமசேவையாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் ஏ.ஆர்.இராசசேகரம், யாழ். மாவட்ட கரப்பந்தாட்டத்தின் தலைவர் கே.ஏகாம்பரம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக லயன் வி.சுப்பிரமணியமும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
7 hours ago
16 Jul 2025