2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குமாரசுவாமி ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த யாழ். ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் அமரர் பி.எஸ்.குமாசுவாமி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

யாழ்.  மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தினால்  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் அமரர் பி.எஸ்.குமாரசுவாமி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக மேற்படி போட்டி நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பற்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகமும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் இருபது ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பற்றிசியன்ஸ் விளையாட்டுக்கழகம் 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X