2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாணவர்களின் விளையாட்டுத் திறணை அதிகரிக்கும் செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ்  பாடசாலை மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாடுகளை அதிகரிக்கும் செயற்றிட்டத்தை இலங்கை மத்திய கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சினால் இந்த வருடத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வரையான எட்டு வருட காலத்தில் இலங்கையில் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் முகமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனொரு கட்டமாக இலங்கையிலுள்ள பிரபல்யமான 6 விளையாட்டுக்கள் தெரிவு செய்யப்பட்டு இதற்கான பயிற்றுவிப்பாளர்கள், கல்வி வலயங்கள் ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டு மாணவர்களுக்கு குறிப்பிட்ட  பயிற்றுவிப்பாளர்கள் குறிப்பிட்ட விளையாட்டை மட்டும் பயிற்றுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது இலங்கையில் பிரபல்யமான விளையாட்டுக்களாக உள்ள வலைப்பந்தாட்டம், ஜிம்னாஸ்ரிக், கரப்பந்தாட்டம், மெய்வன்மை தடகள நிகழ்வுகள், ரக்பீ, கால்பந்தாட்டம் ஆகிய 6 விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர்கள் வலய ரீதியாக தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X