2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அல் கொமெய்னி விளையாட்டு கழகம் சம்பியன்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 09 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
 
தோப்பூர், பிரிமியர் லீக் நடத்திய மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் அல் கொமெய்னி விளையாட்டுக் கழகம் பிரிமியர் கிண்ணத்தைச் சுவிகரித்து 2011ஆம் ஆண்டுக்கான தோப்பூர் பிரதேச சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
தோப்பூர் அல் ஹம்ரா மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த மூன்று தினங்களாக மின்னொளியில் இரவு 7.00 மணி தொடக்கம் அதிகாலை 3.00 மணி வரை நடைபெற்ற இந்த சுற்றுப் போட்டியில் 32 கிரிகெட் அணிகள் பங்குபற்றின.
 
இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோப்பூர் றோயல் அணியை எதிர்த்தாடிய அல் கொமெய்னி அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
 
தோப்பூர் பிரிமியர் லீக்கின் தலைவர் எஸ்.எம்.தானிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுத்தொடரில் நீதி அமைச்சின் இணைப்பாளர் அஸ்செய்ஹ் அப்துர் ரஸ்ஸாக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X