2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அகில இலங்கை உடற்பயிற்சி போட்டியில் மானிப்பாய் மகளிர் கல்லூரி முதலிடம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை கல்வியமைசினால் அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான உடற்பயிற்சிப் போட்டியில் மானிப்பாய் மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் மீண்டும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை ஹாலியெல நகரசபை மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக மாகாண மட்டத்தில் வெற்றிபெற்ற பெண்கள் பாடசாலை அணிகள் கலந்துகொண்டன.
 
ஏற்கனவே கடந்த காலத்தில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற பாடசாலைகளான மானிப்பாய் மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ள இரண்டாம் இடத்தை வவுனியா றம்பைக்குளம் மகளிர் கல்லூரி பெற்றுக் கொண்டுள்ளது.

குறிப்பி;ட்ட இந்த இரண்டு பாடசாலை அணிகளும் ஏற்கனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை மாறி மாறி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X