2025 ஜூலை 17, வியாழக்கிழமை

றிட்ஸ்பரி – தேசிய ஜூனியர் ஸ்கொஷ் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

A.P.Mathan   / 2011 நவம்பர் 01 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொடர்ச்சியாக 22ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த றிட்ஸ்பரி – தேசிய ஜூனியர் ஸ்கொஷ் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் பினர ஜயசூரிய மற்றும் பெண்கள் பிரிவில் நந்தினி உடங்காவ ஆகியோர் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டனர்.

17 வயதுக்குட்பட்ட பிரிவில் ரவிந்து லக்சிறி மற்றும் மிஹிலியா மெத்சரணி ஆகியோர் வெற்றியீட்டியிருந்தனர். இந்த போட்டித் தொடர் தமிழ் யூனியன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது. 300இற்கும் அதிகமான போட்டியாளர்கள் இந்த போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குட்பட்ட பிரிவில் வெற்றிபெற்ற பினர ஜயசூரிய மற்றும் நந்தினி உடங்காவ ஆகியோரையும் அனைத்து பிரிவுகளிலும் வெற்றிபெற்றோரை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X