2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'கிரிடா சக்தி' திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களை உருவாக்க முயற்சி

Kogilavani   / 2011 நவம்பர் 04 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)
விளையாட்டுத் துறை அமைச்சு  கிரிடா சகதி என்னும் திட்டத்தின் கீழ் கரப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து, கபடி ஆகிய விளையாட்டுக்களில் வீரர்களை உருவாக்கும் முகமாக பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஓர் கட்டமாக  மாவட்டம் தோறும்  ஒவ்வொரு விளையாட்டுக்கும்   20 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சிக் காலத்தில் வீர்கள் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 1500 ரூபா  வீதம் ஊக்குவிப்பு பணமு;ம்;, விளையாட்டுச் சீருடை, உபகரணங்கள் என்பனவும் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டதிற்கமைவாக திருகோணமலை மாவட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை  மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்திலும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்திலும் நடைபெற்றது.  இதில் 14 வயது முதல்; 18  வயது வரையான  மாணவர்கள் 745 பேர் இதன்போது கலந்து கொண்டிருந்தார்கள்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X