Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 09 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி திகன இரஜவெல்லையில் அமைந்துள்ள சர்வதேச விக்டோரியா கோல்ப் நிலையம் ஏற்பாடுசெய்துள்ள 10ஆவது சுவிடிஸ் கிளசிக் (SWIDISH CLASSIC) சர்வதேச கோல்ப் போட்டிகள் எதிர்வரும் 18, 19, 20ஆம் திகதிகளில் விக்டோரியா கோல்ப் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எரோல் ஜொன்ஸ்டன் தெரிவித்தார்.
சர்வதேச கோல்ப் போட்டிகள் தொடர்பாக கண்டி இரஜவெல்லை சர்வதேச கோல்ப் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுவீடனை சேர்ந்த பிரபல விளையாட்டு வீரரான ரொல்ப் ட்ரப்லின் என்பவரின் பெயரால் இப்போட்டிகள் இடம்பெறுகிறது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இந்தியாவிலிருந்து சுவீடன் டிதூதுவர் லாஸ் ஒல்ப் லிங்;ட்ரன் கலந்து கொள்ளவுள்ளார்.
இப்போட்டிகள் ஆறு பகுதிகளாக இடம்பெறவுள்ளன.
இப்போட்டிகளில் 150இற்க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 18ஆம் திகதி அவர்களுக்கு பயிற்சி பெறுவதற்கும் 19ஆம் திகதி போட்டிகளை நடாத்துவதற்கும் 20ஆம் திகதி கலை விழாக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 19 ஆம் திகதி பரிசளிப்பு நிகழ்வு இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
7 hours ago
16 Jul 2025