2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 09 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அகில இலங்கை ரீதியாகவும், கிழக்கு மாகாண மட்டத்திலும் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் வி.ரி.முகம்மட் ஹனீபா மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி என்.கே.எம்.இப்றாகிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தலில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட எம்.ஐ.எம்.மிப்றான் எனும் மாணவர் பாராட்டிக் கௌவிக்கப்பட்டதோடு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் வெற்றியீட்டிய மேலும் 19 மாணவர்களும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 30 வருடங்களுக்குப் பின்னர் தேசிய ரீதியிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மாணவரொருவர் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பித்தக்கதாகும். இந்நிகழ்வின் பின்னர், பாராட்டுப் பெற்ற மாணவர்கள் வாகனங்களில் பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லுப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X