2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உதைபந்தாட்டப் போட்டியில் இணுவில் மத்திய கல்லூரி செம்பியன்

Kogilavani   / 2011 நவம்பர் 10 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
உடுவில் கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 16 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியில் இணுவில் மத்திய கல்லூரி; கோட்ட மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியின் முதல் போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயமும் இணுவில் மத்திய கல்லூரியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியில், இணுவில் மத்திய கல்லூரி 4:1 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ முருகன் வித்தியாலத்தை வெற்றிகொண்டது.
இவ்விரு அணிகளும் இரண்டாம் சுற்றில் வலய மட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

மூன்றாம் இடத்திற்க்கான போட்டியில் சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயமும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியும் மோதிக்கொண்டன. இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டி சம நிலையில் முடிவடைந்தது.

இதன்போது, வெற்றி தோல்வியை தீமானிப்பதற்க்காக வழங்கப்பட்ட சம நிலை தவிர்ப்பை தொடர்ந்து தமிழ் கந்தையா வித்தியாலயம் 4:3 என்ற கோல் கணக்கில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியை வெற்றிக்கொண்டதுடன் வலய மட்டத்தில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X