2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அகில இலங்கை ரீதியான கால்பந்து போட்டியில் யாழ். மானிப்பாய் இந்து சம்பியன்

Kogilavani   / 2011 நவம்பர் 10 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி ஏற்பாட்டில் தேசிய மட்ட ரீதியாக நடத்தப்பட்ட 5 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 19 வயதுப் பிரிவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளன.

 

சென்.ஜோசப் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி, டி.எஸ்.சேனநாயக்க  கல்லூரி அணிகள் மோதிகொண்டன.

இரண்டு அணிகளும் ஆரம்பமுதலே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இடைவேளையின் போது 2-0 என்ற கோல் கணக்கில் மானிப்பாய் இந்துக் கல்லூரி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் மோதிக்கொண்டன. இருப்பினும் மானிப்பாய் இந்துவின் அபாரா ஆட்டத்தினால் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணியினால் கோல் எதனையும் பெறமுடியவில்லை.

இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் மானிப்பாய் இந்துக் கல்லூரி இப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X