Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 14 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கை ஹொக்கீ சம்மேலனம் ஒழுங்கு செய்த 39 வது தேசிய கனிஷ்ட ஹொக்கீ போட்டித் தொடரில் மாத்தளை மாவட்ட அணி 1-0 என்ற கோல் வித்தியசத்தில் சம்பியனாக தெரிவானது.
கடந்த 11ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த இப்போட்டியின் இறுதிப்போட்டி கண்டி அஸ்கிரிய சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறுதிப்போட்டியின்போது மாத்தளை மாவட்ட அணியும் கொழும்பு மாவட்ட அணியும் மோதிக்கொண்டன.
மேற்படி இரு அணிகளும் போட்டி முடிவடையும் வரை கோல்களும் பெறாத நிலையில் மேலதிக நேரம் வழஙக்கப்பட்டது. இதன்போது மாத்தளை மாவட்ட அண ஒரு கோலை பெற்று வெற்றிக்கொண்டது.
இப்போட்டித் தொடருக்கு கொழும்பு கிரானட்பாஸ் லயன் கழகங்கள் அணுசரனை வழங்கியதுடன் பிரதம் அதிதியாக கொழும்பு லயன் கழகத்தை சேர்ந்த அஜித் தேவதாஸ் கலந்துகொண்டார்.
12 அணிகள் இப்போட்டித் தொடரில் கலந்து கொண்டதுடன் மூன்றாம் இடத்தை இலங்கை பாடசாலை அணியும் இரண்டாம் இடத்தை கொழும்பு மாவட்ட அஒpயும் பெற்றுக் கொண்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
7 hours ago
16 Jul 2025