2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளத்தில் படகுப் போட்டி

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

ஹஜ் பெருநாளினை முன்னிட்டு புத்தளம் நகரில் இன்று மாபெரும் படகு போட்டிகள் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வெவ்வேறு குதிரை வலுக்களினை உடைய இயந்திர படகுகளுக்கிடையிலான போட்டிகள், வள்ளங்களுக்கிடையிலான போட்டிகள், நீச்சல் போட்டிகள் என்பன நடைப்பெற்றன. இப்போட்டிகளுக்கிடையில் கடற்படையினரின் சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றன.

புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண கட்டளை தளபதி அட்மிரல் ரோஹன பெரேரா, உட்பட முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தளம் ஐக்கிய மீனவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பண பரிசுகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X