Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடத்திய விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
12 கல்வி வலயங்களைச் சேர்ந்த 485 மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டார்கள். ஆண்கள் பிரிவில் 90 போட்டிகளும்இ பெண்கள் பரிவில் 81 போட்டிகளு்ம் 4 பிரிவுகளில் நடத்தப்பட்டன.
மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் கலந்து கொண்டார்கள். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ஈ.போல் அங்கு கருத்து தெரிவிக்கையில்இ 'மாணவர்களுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி போன்று வருடா வருடம் விசேட தேவை உடைய மாணவர்களுககும் வலயம்இ மகாண என்ற அடிப்படையில் வருடாந்தம் இப்போட்டி நடத்தப்படும்' என்றார்.
அம்பாறைஇ தெஹியத்தகண்டி வித்தியாலயம்இ மூதூர் மத்திய கல்லூரி மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் மைதானத்தில் நடைபெற்றது. சாதாரண மாணவர்கள் போன்று இவர்கள் செயற்பட்டமை பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago
16 Jul 2025