Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு அவையின் 'அமரர் செல்லையா ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான' நான்காவது தடவையாக நடத்திய புருட்சல் கால்ப்பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூh மீண்டும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளில் தெரிந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற இப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு வட்டுக்கொட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் நொபெல் விமலேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் முதலாவது கோலை புனித ஹென்றியரசர் கல்லூரி வீரன் அலெக்ஸ் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சென்பற்றிக்ஸ் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ஆனாலும் தம்மை சுதாகரித்துக்கொண்ட சென்பற்றிக்ஸ் கல்லூரி கோல் பெறவேண்டும் என்ற முனைப்புடன் விளையாட போட்டி மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது
தொடர்ந்து இரு அணிகளும் புதிய வேகத்துடன் விளையாடத் தொடங்கினார்கள். இந்நிலையில் சென்பற்றிக்ஸ் கல்லூரி வீரன் யூட் முதலாவது கொலை பெற்று போட்டியை சமப்படுத்திய நிலையில் இரு அணிகளும் கடும் உற்சாகத்துடன் மோதிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
தொடர்ந்து சென்பற்றிக்ஸ் கல்லூரி வீரர்களான ஜக்சன் ஒரு கோலை பெற்றுக் கொண்ட நிலையில் மேலும் இரண்டு கோல்களை யூட் பெற்றுக் கொண்டார்கள். போட்டியில் சென்பற்றிக்ஸ் கல்லூரி 04 க்கு 01 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் நின்ற வேளையில் முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் பெறவேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கி மோதிக்கொண்டன. ஆனாலும் கோல்கள் பெறும் வாய்ப்புகள் தொடர்ந்து சென் பற்றிக்ஸ் கல்லூரிக்க கிடைத்ததே அன்றி புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு அதற்;ககான வாய்ப்புகள் தவறிய வண்ணமே இருந்தது.
இத்தகைய நிலையில் மேலும் நான்கு கோல்களை யூட் ஜக்சன் தலா இரண்டு கோல்கள் வீதம் பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது. இளவாலை புனித ஹென்யியரசர் கல்லூரி கோல்கள் பெற முடியாத நிலமை காணப்பட்டாலும் கூட இறுதி வரை கோல்கள் பெறுவதற்;காக போராடியமை கால்ப்பந்தாட்ட ரசிகர்களை பரவசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
16 Jul 2025