Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதற்தடவையாக பொன்னம்பலம் வெற்றிக்கிண்ணத்திற்காக நடைபெற்ற புருட்சல் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஊர்காவற்றுறை சென். அன்ரனீஸ் கல்லூரி சம்பியனை பெற்றுக்கொண்டது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியும் மோதிக்கொண்டன.
இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டபோதிலும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. போட்டி ஆரம்பமாகியதும் முதலாவது கோலை அன்ரனீஸ் கல்லூரி போட்ட அதேவேளை, வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி தொடர்ந்து இரண்டு கோல்களை போட்டன. இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்டபோதிலும் சென். அன்ரனீஸ் கல்லூரியே வெற்றி பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேலும் நான்கு கோல்களை சென். அன்ரனிஸ் கல்லூரி பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.
ஆட்ட நிறைவில் சென் அன்ரனீஸ் கல்லூரி 06க்கு 02 கோல்கள் என்ற அடிப்படையில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியை வெற்றி பெற்று பொன்னம்பலம் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
7 hours ago
16 Jul 2025