2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யங்றைஸ் கழகம் சம்பியன்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை கால்ப்பந்துலீக் அனுசரணையுடன் நடத்தப்பட்ட கால்ப்பந்து ஊக்குவிப்பாளர் அமரர் யோகராசா ஞர்பகார்த்த  போட்டியில் யங்றைஸ் கழகம் சம்பியனானது.

மெக்கெய்சர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அணிக்கு ஏழு பேர் கொண்டதாக  இச்சுற்றுப் போட்டி  நடத்தப்பட்டுது. 35 வயதுக்கு மேற்பட்டோர் மாத்திரம் இதில் கலந்துகொள்ளத் தக்கதாக அமரர் யோகராசாவின் குடும்பத்தினரால் இப்போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எட்டு கழகங்கள் இதில் பங்கு கொண்டிருந்தன. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற நான்கு அணிகளும் விலகல் முறையில் போட்டியில் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் ஒலிம்பிக்கஸ் கழகமும் யங்றைஸ் கழகமும் மோதிக்கொண்டன. இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றுக்கொண்டன.

வெற்றியைத் தீர்மானிக்க 3  தண்ட உதைகள் பெனால்டி வழங்கப்பட்டது. இதில் யங்றைஸ் கழகம் 3 கோல்களை பெற்றது. ஒலிம்பிக்ஸ் கழகம் 1 கோலினைப் பெற்றுக்கொண்டது. வெற்றி பெற்ற  யங்றைஸ் கழகத்திற்கு வெற்றிக்கிண்ணத்துடன் 10,000 ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.

இப்போட்டித் தொடரில் சிறந்த கோல் காப்பு வீரராக மதிவதனனும் (யங்றைஸ், சிறந்த வீரராக  ஜோயல் ஜிப்சனும் (ஒலிம்பிக்ஸ்) தெரிவு  செய்யப்பட்டு கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X