2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டுத் திறமை மூலம் தேசிய மட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புறங்களிலுள்ள இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறமையை அடையாளம் கண்டு அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான 'திகாமடுல்ல கிறிடா நவோதயம்' என்னும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுமிருந்து  திறமையான விளையாட்டு வீர்ர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் விளையாட்டு சார் திறமையான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கிராமப்புறங்களில் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகள் பலரிருந்தும் அவர்களின் வறுமை நிலை காரணமாகவும் மைதானம் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லாமையினாலும் தமது திறமைகள் அப்படியே மழுங்கடிக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டு வந்தனர். இவ்வாறான இளைஞர், யுவதிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படும்போது தமது திறமை மூலம் தேசிய மட்டத்திற்கு உயர்வடைந்து நாட்டுக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்க முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X