2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலிகாம பிரதேச செயலகங்களுக்கிடையே மென்பந்து கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் வலிகாமத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே நடத்திய நட்புக்கான 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய மென்பந்து கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி வெற்றி பெற்றுள்ளது.

கல்வியங்காடு ஸ்ரீஞானபாஸ்கரோதாயா விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில் கோப்பாய் பிரதேச செயலக அணியும் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 14.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மட்டும் பெற்றது. 78 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோப்பாய் பிரதேச செயலக அணி 13.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 68 ஓட்டங்களை பெற்றது.

இதேவேளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் பிரதேச பிரதேச செயலகங்களுக்கிடையே நடத்திய நட்புறவு வெற்றிக்கிண்ணத்திற்கான 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய மென்பந்து கிரிக்கெட் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கல்வியங்காடு ஸ்ரீஞானபாஸ்கரோதயா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணியும் உடுவில் பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.

இந்த நிலையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் வலிகாமம் பிரதேச பிரதேச செயலகங்களுக்கிடையே நடத்தப்பட்ட நட்புறவு வெற்றிக்கிண்ணத்திற்கான 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய மென்பந்து  கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட உடுவில் பிரதேச செயலக அணியும் தெல்லிப்பளை  பிரதேச செயலக அணியும் தகுதி பெற்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X