2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்க ஆண்டு நிறைவை கொண்டாட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம் கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தின் 50ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அச்சங்கம் நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து  நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

50ஆவது ஆண்டு நிறைவு விழாவை மிகவும் சிறந்த முறையில் கொண்டாடும் முகமாகவும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தும் முகமாகவும் விழாக்குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் பி.முருகவேள், செயலாளர் எஸ்.சிவசங்கர், பொருளாளர் என்.றொபேசன், விழாக்குழுத் தலைவர் சண்.தயாளன்,  செயலாளர் கே.ஸ்ரீகாந்தா,  எஸ்.செல்வராசா, என்.நவரத்தினராசா, என்.ரவீந்திரா ஆகியோர் விழாக்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X