2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிண்ணியா விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிண்ணியா விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விளையாட்டு உபகரணங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப்பின்  இவ்  ஆணடிற்கான நிதியொதுக்கீட்டின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இவ்வாண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் சீ. கிருஷ்னேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல், விளையாட்டு உத்தியோகத்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • sivanathan Friday, 23 December 2011 03:21 AM

    ஒதுக்கீடு செய்வது அரசியல்வாதிகள். வழங்குவது அரச அதிகாரிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X