2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வேலணைப் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே 2012ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது சம்பந்தமான கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

வேலனை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் வேலணைப் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள், செயலாளர்களை கலந்துகொள்ளும்படி வேலணை பிரதேச செயலக விளையாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ள கழகங்கள் தமது கழக தடகள வீரர்களின் பெயர்ப்பட்டியல்கள், கணக்கறிக்கைகள் பொதுக்கூட்ட அறிக்கைகளையும் கொண்டுவரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்பந்தாட்ட வீர, வீராங்கனைகளுக்கான கால்பந்தாட்ட பயிற்சி சம்பந்தமான கருத்தரங்கு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X