2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தாருல் உலூம் பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2011 டிசெம்பர் 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ். எம். மும்தாஜ்)

முந்தல் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விருதோடை கிராமத்தில் இயங்கிவரும் தாருல் உலூம் பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி  இன்று மாலை விருதோடை அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் அமானா தகாபுல் காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் சிறுவர்கள் தமது பல்வேறு  திறமைகள் வெளிக்காட்டினர்.

போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ். எச். எம். முஸம்மில் அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X