2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடக்கில் மாவட்டங்களுக்கு இடையிலான ஊர் சுற்றும் போட்டி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 10 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

 

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண மாவட்டங்களுக்கு இடையேயான இளைஞர்களுக்கான ஊர்சுற்றும் போட்டி கடந்த 7ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்களுக்கான 12 கிலோ மீற்றர் தூரத்திற்கான ஊர்சுற்றும் போட்டியை முல்லைத்தீவு மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி எல்.ஃபி.ஆர்.மார்க் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இப்போட்டியில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட அணிகளைச்சோந்த வீரர்கள் கலந்துகொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்று முதல் பத்து இடங்களைப் பெற்ற வீரர்களின் விபரம் வருமாறு.

1ஆம் இடம் கே.ஜெயந்தன் - யாழ்ப்பாணம் - 40:17:5 செக்கன்.

2ஆம் இடம் வி.லோகாரதன் - கிளிநொச்சி.

3ஆம் இடம் ஜே.எம்.எஸ்.எஸ்.குமார - வவுனியா.

4ஆம் இடம். கே.நவநீதன் - வவுனியா.

5ஆம் இடம் எஸ்.கணேஸ்வரன - யாழ்ப்பாணம்.

6ஆம் இடம் எஸ்.பிரதீபன் - மன்னார்.

7ஆம் இடம் ஆர்.சாந்தன் - வவுனியா.

8ஆம் இடம் எம்.எஸ்.சாறுக் - மன்னார்.

9ஆம் இடம் ஆர்.ரகரன் - யாழ்ப்பாணம்.

10ஆம் இடம் ரி.தேவராசன் - மன்னார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X