2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டி மாவட்ட அரச சேவை விளையாட்டு விழாவில் போகம்பறை சிறைச்சாலை சம்பியன்

Super User   / 2012 ஜனவரி 14 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்ட அரச சேவை விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் நிறைவு பெற்றது.

கண்டி மாவட்ட செயலகம் முதன் முறையாக ஒழுங்கு செய்த இவ்விளையாட்டு விழாவின் சம்பியனாக 273 புள்ளிகளை பெற்ற கண்டி போகம்பறை சிறைச்சாலை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இவ்விளையாட்டு விழாவின் போது 158 புள்ளிகளை பெற்ற கண்டி போதனா வைத்தியசாலை இரண்டாம் இடத்தை பெற்று கொண்டது.

கண்டி மாவட்டத்தை சேர்ந்த 20 பிரதேச செயலகங்கள் உட்பட 40 அரச நிறுவனங்கள்  இப்போட்டிகளில் பங்கு பற்றியதுடன் உடதும்பறை பிரதேச செயலகம் 73 புள்ளிகளை பெற்று பிரதேச செயலகங்னகளுக்கிடையில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் மானெல் பண்டார, கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.எம்.ஜீ. பெறமுனே கண்டி மேலதிக அரசாங்க அதிபர் சுனந்த காரியப்பெரும ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கிவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X