2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கிடையே வலைப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 18 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட 15 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழா வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.

அராலி சரஸ்வதி மகாவித்தியாலய மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயமும் மோதிக்கொண்டன.

முதல் பாதி ஆட்டத்தில் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் 08 : 03 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னணியிலிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் சரஸ்வதி மகாவித்தியாலயம் 06 : 04 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னணியிலிருந்தபோது ஆட்டம் முடிவடைந்தது.

ஆட்ட இறுதியில் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் 14 : 07 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X