2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானம் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 19 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கிராமத்தில் அமைந்துள்ள அடம்பன் ம.வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானம் இன்று வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கூடைப்பந்தாட்ட மைதானம் சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது  என அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

குறித்த விளையாட்டு மைதானத்தை இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயேஸ் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு அதிகாரி கேணல் ராமநாயக்காஇகேணல் யூட்பெணான்டோஇமற்றும் பிரதேச செயலாளர்கள் மதகுரு என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த கூடைப்பந்தாட்ட மைதானம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதேடு அவ் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையில் போட்டியும் இடம் பெற்றது. இதன் போது வெற்றி பெற்ற அணியிக்கு வெற்றிக்கேடயங்களும் சான்றுதல்களும் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X